செவ்வாய், 26 ஜனவரி, 2010

doctors explained from the engineers perspective

i have always wondered if the people from medical profession were born to behave alien to others views. i got this idea as i was a sick child i used to spend much of my "leisure" time in hospitals.

  1. some of the observations that i have made since then are...
  2. doctors call their classmates with the prefix dr. which engineers would not dare to do.
  3. while the rest of the city is preparing itself to wake up. you would have wondered hospitals are full by 7 in the morning.all medicos prefer to start early citing some bizare medical reasons.
  4. when engineers complain of odd night shifts, you cannot find a doctor who complains of night"duty". they prefer night shifts.(once my aunt who is a doctor worked 4 days at a stretch. it was we cousins were drowsy supplying refeshments to her and not her!!)
  5. whenever a doctor with his coat walks around in the hospital corridor. he always walks with his head held high, for others to wish him. what a confidence. you cannot find an engineer do that unless he owns the concern.
  6. docs speak in a voice just perceptible to patient 2 ft away.even the patient attender cannot hear the secrets.
  7. whatever age the doctor be his hands never tremble after adorning the scalpel.
  8. they can stand for hours together in operation theatre without an inkling of tiredness. where do you get all the energy docs?
  9. they are extra cautious about personal cleanliness. but the doctors table is always a mess.
  10. they can memorise the entire pillow sized books in no time. but engineers try to reduce the amount to be studied by limiting the studies to only class notes.
  11. have u ever found a doctor on sunday evenings.
  12. though docs use the net for studying have u ever received a mail by a practising doctor.
  13. they bring the smell of the hospital home. baring a few homes the doctors houses smell the same (smell of medecines)
  14. why there is no cheaper and better alternative. ( the better alternatives are always costly)
  15. why do docs use medical jargons when conversing with a non medico where the use is perfectly unsolicited. 
all these are my observations.
your clarification is needed.
disclaimer:
the post is not to hurt the sentiments of the doctors, but their views are required to come to the conclusion.

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

அறியாத வயசு

சென்னைக்கு வந்த புதிதில் அதன் ஓட்டங்கள் அறியாமல் இருந்தோம். இங்குள்ள பல செயல்கள் எங்களுக்கு வியப்பை அளித்தன. பரோட்டா வாங்கினால் சால்னா தராமல் சைடு-dish வாங்க சொன்னார்கள். கோனார் கடையில் சால்னா வை குடித்தே பழக்க பட்டவர்களுக்கு அது ஒரு புதுமையாக இருந்தது.
பிறகு அவர்களை ஏமாற்ற முட்டை பரோட்டா side-dish இல்லாமல் சாப்பிட்டு வந்தோம்.
ஒரு முறை NCC name badge வாங்க நானும் நாகாவும் சென்று இருந்தோம். அப்போது எங்களுக்கு அதன் விலை தெரியாது. பார்த்து கொள்ளலாம் என்று ஒரு குருட்டு தைரியத்தில் சென்று விட்டோம்.(நாங்கல்லாம் மதுரை காரைங்க...).
அப்போது ஒரு கடையை பூட்டி கொண்டு இருந்தார்கள். அந்த கடையை திறக்க சொல்லி 3 badge order பண்ணினோம் . அவர்களுக்கு ரொம்ப சந்தோசம். ஒரு badge 80 வீதம் 3 சொன்னார்கள். அதை பேரம் பேசி 200 கு முடித்தோம். வெற்றிக் களிப்பு.
கல்லூரி வந்து பார்த்தால் தான் தெரிந்தது ஒரு badge 10 ருபாய் கும் மிகாது என்று.
கற்றுக் கொண்டது பேரம் பேசும் போது விலையை நாமாக வாயை விட்டு கூறகூடாது .

ஒரு முறை petrol போட சென்று இருந்தேன் ( அது தான் முதல் முறை) 2l 66 ருபாய் என்று ஞாபகம். வீட்டில் இருந்தே சில்லறைகளை பொறுக்கி கொண்டு சென்று இருந்தேன். 6 ரூ கும் 20 பைசா களாக சேகரித்து வைத்தேன்.( 20 பைசா வழக்கு ஒழிந்து வந்த நேரம் அது. )
நல்ல வேளையாக 6 ரூ மிச்சபடுத்திய சந்தோசம்.
சிறிது தூரம் சென்று பார்த்தால் வண்டி நின்று விட்டது. நானும் பலவாறு சிந்தனை செய்து பார்த்தால் தான் தெரிந்தது காசை எண்ணிகொடுத்த மகிழ்ச்சியில் petrol போட மறந்து விட்டு இருந்தேன்.
பாடம் : dont try to out smart others.

சனி, 9 ஜனவரி, 2010

curiosity kills the "cat"

எனக்கு சிறு வயது முதலே பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் " கொஞ்சம் " அதிகம்.நான் திறந்து பார்க்காத பொருட்களே இல்லை என்று சொல்ல முடியும்.(பேனா, காஸ் stove, washing machine, dish washer, mixie, cell phone, cycle, bike)
 அதனால் விளைந்த misgivings பற்றி சில குறிப்புகள்.
ஒரு முறை வீட்டில் fan சுற்ற வில்லை. நம்மால தான் சும்மா இருக்க முடியதுலே அதை கழட்ட முயற்சித்தேன். பகிரத பிரயத்தனத்துக்கு பின்பு அதை கீழே இறக்கினேன். (ceiling fan உயரமா இருக்கும் சின்ன வயசுல). அதுலே இருக்க அழுக்க clean பண்றேன்னு சோப்பு தண்ணிலே ஊறவைத்து விட்டேன். பின்பு அனைத்தயும் reassemble பண்ணி மாட்டி விட்டேன். நான் என்ன கற்பனை பண்ணினேன் என்றால் dust தான் அதை சுற்ற விடாமல் நிறுத்தி வைத்து இருந்தது என்று.
பின்பு electrician வந்து சரி பண்ணும்படி ஆகிவிட்டது (என்ன சரி புது fan தான் வாங்கினோம். நான் தான் அதை தண்ணிரில் குளிப்பாட்டி இருந்தேனே).
only later did i realise that the problem with the fan was the condenser and changing it does not require the fan to be brought down.
இந்த முறை vacuum cleaner. அக்கு வேறு ஆணி வேராக அதை பிரித்து விட்டேன். அப்புறம் அது எப்படி suction force கேநேரடே பண்ணுகிறது என்று தெரிந்து கொள்ள switch ஐ போட்டேன். மறு நொடி அந்த motor தரையில் உருண்டு ஓடி அடங்கியது. பின்பு தான் அந்த எச்சரிக்கையை படித்தேன். " high speed motor.secure the motor before running". நல்ல வேளை carbon brush மட்டும் தான் உடைந்து இருந்தது .
அடுத்து tv. திடீர் என்று எங்கள் வீட்டு tv தனது ஓடத்தை நிறுத்தி கொண்டது. நான் தான் ஆர்வ கோளாறு ஆயிற்றே. உள்ளே திறந்து சரி பண்ண துவங்கி விட்டேன். நல்ல வேளையாக என்னுடைய கணிப்பு சரியாக இருந்தது fuse தான் போய் இருந்தது.
இல்லை என்றால் நான் பரலோகம் போய் இருக்க வேண்டியது தான்.( the capacitor energising the CRT is capable of storing charges that can kill a person instantaneously )
என்னுடைய விளையாட்டுகள் பல தோல்வியில் முடிந்து இருந்தாலும் நான் அந்த ஆர்வத்தை அடக்க நினைத்ததே இல்லை. வெற்றி பெற்ற expts பற்றி கூறினால் அது அவ்வளவு சுவாரசியமாக இருக்காது. only failures can teach.
psychology  இல் படித்த intrinsic motivation பற்றி சில வார்த்தைகள்.
they are not affected by the external reward.
they are not affected by the success or failure of the outcome.
they are mainly involved in the pleasure of doing the job itself

வெள்ளி, 8 ஜனவரி, 2010

my experiments with science

சிறு வயதில் என்னுடைய பொழுதுகள் தனிமையிலே கழிந்தன. உடன் பிறந்தோர் யாரும் இல்லாதது ஒரு முக்கிய காரணம். அப்போது தனிமையை போக்க நான் ஒரு உத்தியை கையாண்டேன். பலர் அதை பண்ணி இருக்க கூடும். என்னை ஒரு ரசவாதியாக கற்பனை பண்ணிக்கொண்டு வீட்டில் இருக்கும் ரசாயனங்களை கலக்க ஆரம்பித்து விடுவேன். என் அம்மாச்சி வீட்டில் மருத்துவர்கள் இருந்ததனால் பழைய / புதிய மருந்துகள் அபரிமிதமாக கிடைத்தன. அங்கு பல கண்ணாடி குடுவைகள் இருக்கும். எனக்கு அவை ரொம்பே பிடிக்கும் ஏன் என்றால் அதில் தான் எதாவது நிற மாற்றம் தெளிவாகத் தெரியும்.
அனைத்தயும் கலந்துவிட்டு இரண்டு நாட்கள் ஊற வைத்து விடுவேன் பின்பு ஸ்பிரிட் லாம்பில் போட்டு எரித்து விடுவேன். பல முறை கொழுந்து விட்டு எரியும். பின்பு தான் தெரிந்தது நமது மருந்துகள் பல inflammable என்று.எனக்கு அதில் புடித்த விசயமே நாம் என்ன தான் கலந்தாலும் 2,3 layer ஆக பிரிந்து இருக்கும். miscibility பற்றி தெரியாத வயது.

பின்பு எனக்கு effervescence மீது காதல் வந்தது. அதனால் toilet acid தான் எனது குறி. baking soda ,vinegar போன்றவற்றை கலந்து ஒரு புட்டியில் அடைத்து வைத்தால் அது உடைத்து வெளி ஏறும்.எனது ரசாயனங்கள் சில ( bleaching powder, whitner, stain remover, tooth paste, boric acid{carrom board powder}, ink, eucalyptus oil, and all used medicenes). எனது முக்கிய heat source பழைய வெடிகள்.

ஒரு  முறை என்னுடைய ஆர்வ கோளாரால் அடுத்த வீட்டில் தீ வைத்ததாக ஆகி விட்டது .என்ன பண்றது ஒரு விஞ்ஞானி வாழ்கையில் இதல்லாம் சாதாரணம்.

  1. சில mishaps
  2. பள்ளியில் ஒரு முறை செய்முறை வகுப்பில் அனைத்து திரவங்களையும் boiling tube இல் கலந்து கொண்டு இருந்தேன். அப்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை பிங்க் நிற வாயு ஒன்று வெளியேறியது. நல்ல வேளை ஜன்னல் பக்கத்தில் இருந்ததனால் அதை அப்படியே தூக்கி எறிந்து விட்டேன் .till this date i dont know what the pink gas is.!!!
  3. அதே போல் கல்லூரியில் பல முறை standard measuring flask இல் தேவையானவற்றை கலந்து இறுக்கி மூடி பின்பு hot plate இல் வைத்து விட்டு தண்ணீர் குடிக்க சென்று விட்டேன் (என்ன வெட்டி முறித்து விட்டேன் ...) ஒரே களேபரம். என்னவென்று பார்த்தால் நான் வைத்தது தடம் தெரியாமல் வெடித்து விட்டு இருந்தது. It shattered into small pieces that we could not actually locate the shards. பாவம் விபின் அவன் தான் அதற்கு முன்னால் நின்று கொண்டு இருந்தான் .
  4. பிறிதொருமுறை theory class  இல் படித்ததை practical ஆக try பண்ண முயற்சித்தேன். ஒரு culture contaminate ஆகி விட்டது. books told " disinfect the contaminated culture with acid or heat" before discarding. நானும் வேகமாக conc. sulphuric acid (2.5l) bottle எடுத்து கொண்டு conical flask இல் ஊற்ற , அடுத்த நொடி என் கையில் flask இன் கழுத்து பகுதி மட்டும் இருக்க மீதி வெடித்து சிதறியது. இப்போது என் ஒரு கையில் 2.5l sulphuric acid உள்ளது அடுத்த கையில் வெடித்து சிதறியவை. 
தற்போது அடுத்த disinfection --heating. flask ஐ microwave oven இல் வைத்தேன் 5 min incubation போட்டு விட்டு வழக்கம் போல மறந்துவிட்டேன் . oven முழுவதும் பொங்கல் வைத்தது போல் ஆகி விட்டது.அதற்கு rebi என்னை திட்டியது தான் மறக்க முடியவில்லை. ( he does not know the basics of good lab practices himself)
இது என்னுடைய chemistry விளையாட்டுகள் தான் பிறகு physics பற்றி கூறுகிறேன்.

புதன், 6 ஜனவரி, 2010

stich in time

இன்னும் ஸ்கூல்லே நிறைய எக்ஸ்ட்ரா கறிகுளர் அக்ட்இவிட்டி லே ஈடு பட்டு இருக்கலாமோ என்று நினைக்க தோணுது .
பள்ளிஇல் படிப்பு தவிர வேறு ஒரு செயலை நினைக்கவே இல்லை.ஆனால் படிப்பிலும் முதலாவதாக வர வில்லை. விளையாட்டு கேளிக்கைகளிலும் ஈடு படவில்லை.
திரிசங்கு சொர்க்கம் தான். விளையாட சென்றால் nerd என்று  அவர்கள் கேலி செய்தார்கள்.
இங்கோ ஒன்றும் தெரியாதவன்  என்று ஏளனம் செய்தார்கள்.
jack of all trades master of none.
கல்லூரியிலும் அதே நிலை தான் விடுதியில் தினம் சின்னஞ் சிறு கதைகள் பேசி கழிந்தது.
ஒரு புது ப்ராஜெக்ட் செய்யவோ, நூலகம் சென்று படிக்கவோ இல்லை. gre படிக்க என்று பல மணிநேரம் கழிந்தது.ஆனால் அது கால் அணாவிற்கு அது பிரயோஜனபடவில்லை.
இன்றோ பல மணி நேரம் புடிக்காத விஷயங்களை படிக்க வேண்டி உள்ளது. இதை கல்லூரியில் படித்து இருந்தால் ஒரு தங்க பதக்கமே வாங்கி இருக்கலாம்.
இன்று படிப்பது வாழ்க்கைக்கு சிறிதும் உபயோகம் இல்லாத வெறும் பேச்சாக இருக்கிறது.

என்ன செய்ய காலத்தே பயிர் செய் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
உபயோகமாக ஏதாவது செய்யலாம் என்று ஏரோ modelling வகுப்பு செல்லலாம் என்று நினைத்தேன். quorum இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
நாம ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது.
முதல் வலை பதிவே ஒரு cynic ஆக இருப்பதில் எனக்கு வருத்தம் தான். எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டுமே.
என்ன நான் சொல்றது